states

img

ம.பி: காவல்துறை அதிகாரியை மிரட்டிய பாஜக எம்.எல்.ஏ!

மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காவல்துறை அதிகாரி ஒருவரை பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான சுரேந்திர பட்வா மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் தேர்தல் விதிகளை மீறி பாஜக வேட்பாளர் சிவராஜ் சிங் சவுகான், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி மைக்கை நிறுத்திய காவல்துறை அதிகாரியான மஹேந்திர சிங் தாகூரை, "இங்கே வா, நீ திரும்பி வர முடியாத ஒரு இடத்திற்கு உன்னை தூக்கி எறிந்துவிடுவேன்” என பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர பட்வா மிரட்டில் விடுத்துள்ளார். மேலும் சுரேந்திர பட்வா காவல்துறை அதிகாரியை தாக்கவும் முயன்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.